இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அனைவரும் போன் பே, ஜிபே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் எளிதாக பண பரிவர்த்தனை நடைபெறுவதால் பலரும் இதை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு நன்மைகள் பல நடந்தாலும் டிஜிட்டல் காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகளும் அரங்கேறிதான் வருகிறது.

அந்த வகையில் தற்போது ஜிபே நம்பருக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாக கூறி கூறி புது வகையான மோசடி அரங்கேறுகிறது. அதாவது முதலில் உங்களுடைய ஜிபேவுக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாக ஒரு மெசேஜ் வரும். அதை நம்பி நீங்கள் பணத்தை மீண்டும் திரும்ப அனுப்பினால் வங்கி கணக்கை ஹேக் செய்து மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள். எனவே இதுபோன்ற மோசடி அழைப்புகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அது போன்று ‌ ஏதேனும் மெசேஜ் மட்டும் அழைப்புகள் வந்தால் காவல் நிலையத்தை அணுகி பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறி விட வேண்டும்.