தமிழகத்தில் இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், நாளை அந்தமான் பகுதியில் உள்ள வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. இது மேற்கு-வடமேற்காக நகர்ந்து 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.