
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற மே 23ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் இன்று முதல் 24 ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.