
இந்தியாவில் நான்கு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் அதிகம் பரவுவதால் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக கோழி பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த செய்தியை மக்கள் மத்தியில் சற்று பீதியை கிளப்பியுள்ளது.