EPFO தன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது, இணைய மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அதன் சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மட்டுமின்றி EPFO ​​சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்துள்ளது.

போலியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும் EPFO தன் சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஒருபோதும் EPFO அதன் சந்தாதாரர்களின் தனிப்பட்ட தகவல்களை தொலைபேசி அழைப்புகள், மின் அஞ்சல்கள் மற்றும் சமூகஊடகங்கள் வாயிலாக கேட்பது இல்லை.

EPFO சந்தாதாரர்கள் அவர்களின் யூஏஎன் எண், பாஸ்வேர்டு, பான் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி (அ) வேறு எந்த தனிப்பட்ட விபரங்கள் (அ) நிதி விபரங்களை யாருடனும் எப்போதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. போலி அழைப்பு (அ) செய்திகள் வரும்போது உங்களது விவரங்களை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் எனவும் உடனே இதுகுறித்து உள்ளூர் போலீஸ் (அ) சைபர் கிரைம் கிளைக்கு புகாரளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.