சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட ம.நீ.ம தலைவர் கமலஹாசன் கூறியதாவது, ஜனநாயகம் கூட்டாட்சி இரண்டும் நம் இரண்டு கண்கள். இவை தேசிய அளவில் நிலை பெற்று இருக்க தற்போதைய எம்பிக்கள் எண்ணிக்கையே போதுமானது.

எனவே தொகுதி மறு சீரமைப்பு முயற்சி தேவையற்றது. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை வழங்காதது, மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவது இது எல்லாம் பார்த்தால் எதேச்சதிகார போக்குதான் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.