
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், 50,000 ஆண்டுகள் வரலாறை கொண்ட மரபணுவின் தொடர்ச்சி. அது இயற்கையோடு இணைந்து என்ன செய்யணுமோ அதை செய்யும்… தலைவர் அவர்கள் கூட இயற்கை எனது வழிகாட்டி என்று சொன்னார்… இயற்கையும் வழிகாட்டும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த இந்த தமிழினத்திற்கு, இயற்கையும் வழிகாட்டும். இங்க நடந்தது உலகம் ஏற்க முடியாத அநியாயம்… அக்கிரமம்… ஒரு திட்டமிட்ட இன அழிப்பு.
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்கிற அறிவியல் கோட்பாடு சரிதானா நீங்க அதற்கான பதிலை, தீர்வை தமிழினம் திருப்பி கையில் எடுத்தே தீரும். இதுவே ஒரு செய்தி சொல்லணும்னு நினைக்கிறேன்… தந்தை செல்வா அகிம்சை வழி….. தலைவர் பிரபாகரன் ஆயுத வழி…. இதெல்லாம் இயற்கையாகவே அவர்களிடம் இருந்தது…. இப்போ எங்கள் வீட்டுப்பிள்ளை துவாரகா அரசியல் வழியில் வராங்க….
இந்த அரசியல் வழிக்கும், நேர்மை சுமந்த எங்களுடைய தமிழ் இனம் மண்ணுக்கும் பேரிழப்பை செய்த எங்களுடைய தமிழின மக்களுக்கும் ஒரு தீர்வை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும், ஐநா சபையும் தரலேன்னா…. நீங்க மேற்கொண்ட இரண்டு இடம் இருக்கு…. அகிம்சை வழி இருக்கு, ஆயுதம் வழியும் இருக்கு. எந்த வழியில் வேண்டுமானாலும் இயற்கை எங்களுக்கு தரும்… ஒரு காலமும் நாங்கள் பின் வாங்க மாட்டோம். புறநானூற்றை சுமந்த கூட்டம்…
நெற்களம் என அகநானூறில் நிற்கின்றோம். குடும்பம், பெண்கள், அன்பு, வாழ்க்கை இது அகநானூறு. 2000, 3000 வருஷத்துக்கு முன்னாடியே வகுத்தது. இது அத்தனைக்கும் பங்கம் வந்தால், போர்க்களத்தில் நிற்பான்…. புறநானூற்றை சுமந்து…. வீரம் சுமந்து… ஆக இப்படி கண் முன்னாடி ஒன்னு நின்னுதுன்னா அது ஈழத்தில் மட்டும்தான். அதனால் மறுபடியும் நிற்கிற நிலையை இந்த உலகம் உருவாக்கி விடக்கூடாது என்பதுதான்…. இதை நான் பேரன்போடு சொல்வதாக எடுத்துக் கொண்டாலும் சரி, இல்லை பெரும் எச்சரிக்கையோடு சொல்வதாக எடுத்துக் கொண்டாலும் சரி என தெரிவித்தார்.