தமிழகத்தில் தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கிறது. இந்நிலையில் தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணி வருகிற ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று தேமுதிக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சதீஷ் அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக தொடரும் என்றும் வருகிற ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் தற்போது அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று சதீஷ் கூறியுள்ளார்.