
அதாவது தமிழ்நாட்டிற்கு நாங்கள் தண்ணீர் திறந்து விட முடியாது, இயலாத சூழலில் இருக்கிறோம். உச்சநீதிமன்றம் சொன்னாலும் கூட, அதனை திறந்து விடக்கூடிய சூழலில் நாங்கள் இல்லை என்பதை அனைத்து கட்சி கூட்டத்தில் அவர்கள் முடிவாக எடுத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் கடந்த 123 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வறட்சி என்பது நிலவுகின்றது.
இன்னும் சொல்லப்போனால் கர்நாடகாவின் குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்ய கூட முடியாதாக இருக்கின்றது. எங்களுக்கு 70 TMC தண்ணீர் தேவைப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது என்பதை அவர்கள் முடிவாக எடுத்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் கையிருப்பில் 53 TMC தண்ணீர் மட்டுமே இருக்கின்றது. எனவே தண்ணீர் திறந்து விட முடியாது என தெரிவித்துள்ளனர்.