
அண்மையில் நடைபெற்ற பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகள் பின்பற்றவிடல்லை. அதோடு 48 நாட்கள் மண்டலாபிஷேகத்தை அடிப்படையாக கொண்டு தைப்பூசம் கொண்டாடப்பட இருப்பதை மறந்துவிட்டு கும்பாபிஷேகம் கொண்டாடப்பட்டது.
மேலும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அத்துமீறி நுழைந்து விட்டார். ஆகையால் அதற்கு பிராயசித்தம் செய்ய அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என பா.ஜ.க MLA வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
அதே சமயத்தில் ஆகம விதிகளின் படி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என MLA வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.