
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், அதானி ஹார்பரில் 21 ஆயிரம் கோடி போதை பொருள் பிடிபட்டது… யாரு கைதானார்கள் ? யாரென்று தெரிந்ததா ? சத்தமாக பேசினேன் என்று சொல்கிறீர்கள்…அதானி ஹார்பரில் 21,000 கோடிக்கு கொக்கைன் பிடிபட்டது எப்படி ? யார் என்று ஏதாவது தகவல் வந்ததா ? இதிலிருந்து என்ன தெரிகிறது ?
ஏர்போர்ட் மூலமாக எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் கடத்திக் கொண்டு வருவார்கள்…. இப்ப பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்…. பொருளாதார நாசம் ஆகிவிடும்…. ஏனென்றால் ஏர்போர்ட் அவர்கள் கையில் இருக்கிறது…. தங்கத்தை கொண்டு வந்து….. கொடுக்கிறவனிடம் கொடுத்து….. கோடீஸ்வரனாகி….. நம்ம காசை உறிஞ்சிப்பவன் மட்டும் இல்லாமல்….. ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது..
நாள் கணக்காக பேசலாம்…. நீங்கள் நல்ல பயணத்தில் இருக்கிறீர்கள்…. பெரிய இடத்தில் வைத்திருப்பார்கள் மீட்டிங்… தயாரிப்பாளர் சங்கம் இவர்கள் குரல் கொடுத்தார்களே…. எட்டு வழி சாலைக்காக…. பொது பிரச்சனைக்காக நான் அரெஸ்ட் ஆனேன்… மோடியை எதிர்த்து…. பாரதிராஜா சார்… சீமானை அரெஸ்ட் பண்ண போனார்கள் என்று கேள்விப்பட்ட உடனே முன்னாடி போய் என்னை அரெஸ்ட் பண்ணுங்கள் என கைதானேன்..
இந்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்னை ஏதாவது பாராட்டியதா? நான் மக்களிடம் விட்டுவிடுகிறேன்…. நான் அதை விரும்புறதும் கிடையாது… கவர்னர் மாளிகை முன்பு போராடினேன். அதற்க்கு வேற பட்டம் கொடுத்தார்கள்… அதிலும் நான் ஜெயிச்சேன்… ஏகப்பட்ட வரலாறுகள் இருக்கிறது. அதனால் இப்ப நான் ஏதும் பேச விரும்பவில்லை… மன்சூர் அலி கானை நீங்கள் சாதாரண மயிராக நினைக்காதீர்கள்…. விளைவு பயங்கரமாக இருக்கும் என தெரிவித்தார்.