அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் நேற்று மாலை அமெரிக்கா போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 171 பயணிகளுடன் புறப்பட்டது.

ஆனால் புறப்பட்ட விமானத்தின் மையப் பகுதியில் இருந்த கதவு 16,325 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெயர்ந்து விழுந்தது.

இது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இந்த விமானம் பாதுகாப்பாக போர்ட்லேண்ட் விமான நிலையத்திற்கு திரும்பியது.