
அமெரிக்க அதிபரான ஜோபைடன் தேசிய பாதுகாப்பு காரணத்தினால் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலியை 250 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதம் கால அவகாசம் வழங்கியது. அதற்குள் அந்த செயலியை விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலி அகற்றப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதில் ஜனவரி 19ஆம் தேதிக்குள் டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் போடப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கும் டிக் டாக் செயலியை தடை செய்தால் கருத்து சுதந்திர பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மனு கடந்த மாதம் 18ம் தேதி விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிமன்றம் ஜனவரி 19ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி டிக்டாக்கில் அமெரிக்காவில் மட்டும் 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில், நேற்று தடை அமலுக்கு வந்தது. அதன்படி டிக் டாக் செயலியின் சேவை தற்காலிகமாக நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
அதோடு கூகுள் பிளே, ஆப்பிளில் இருந்தும் டிக் டாக் நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் இன்று பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டிக் டாக் தடையை விரும்பவில்லை. அவர் பதவியேற்ற உடன் டிக் டாக் மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வோம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரும் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் கூறியுள்ளது.