அமெரிக்காவை சேர்ந்த மேரி பெர்ல் செல்மர் ராபின்சன் என்ற பெண் அதிக அளவில் வாய் திறக்கக்கூடிய சாதனையை படைத்துள்ளார். இதற்காக இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மேரி தனது வாயை முழுமையாக திறக்கும் போது 7.62 சென்டிமீட்டர் அகலம் அதாவது 3 அங்குலம் திறக்கிறார்.

இதற்கு முந்தைய சாதனையாளரான சமந்தா ராம்ஸ்டெல் 2.54 அங்குள்ள சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அதிலும் ஆச்சரியமானது மேரி தனது வாயைத் திறந்து 10 பட்டி உடைய பர்கரை ஒரே நேரத்தில் வாயில் வைப்பது தான். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த சாதனையை படைத்திருக்க முடியும். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த கின்னஸ் நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனதால் தற்போது அது நிறைவேறி உள்ளது என கூறினார்.

கணவருடன் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காரணத்தால் கின்னஸ் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அதனால் சாதனை படைக்கும் வாய்ப்பு தவறியது எனவும், பின்னர் மவுத் கேப் சாதனையாளர்கள் வீடியோக்களை யூடியூபில் பார்த்தபோது தன்னாலும் இதை சாதிக்க முடியும் என்ற உறுதியில் தற்போது இதை செய்து காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கண்ணாடியில் அடிக்கடி வாயைத் திறந்து பார்த்து அதனை அளந்து பார்த்தபோது தன்னிடம் இந்த தனித்திறமை இருப்பதையும் உணர்ந்ததாக கூறினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றர். பொதுவாக அதிகம் வாய் திறக்கும் போது தசை தண்டோர்கள் இழுத்துப் போகும். ஆனால் மேரியின் வாய் அமைப்பு அப்படி இல்லாமல் தொடர்ந்து திறக்க முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.