மும்பையில் தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாயின் நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மும்பையில் உள்ள கோரேகாவ் பகுதியில் ஒரு வீட்டில் சக்தி என்ற நாய் தன்னுடைய 10 குட்டிகளுடன் இருந்தது. அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில் அந்த பகுதிக்கு வந்த ஒரு புலி அங்கு படுத்திருந்த தாய் நாயை வாயில் கவ்வி சென்றது.

அதன்பின் சிறுத்தையுடன் போராடிய தாய் நாய் உயிருடன் வந்த நிலையில் பசியில் இருந்த தனது குட்டிகளுக்கு பாலூட்டி உள்ளது. இந்த தாக்குதலில் நாய்க்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, உணவு குழாயில் சிறிய துளை ஏற்பட்டதால் அது சாப்பிடும் உணவு வெளியே வரும் அளவிற்கு தீவீர காயம் ஏற்பட்டது. சக்திக்கு  பல இடங்களில் மருத்துவ உதவி நிராகரிக்கப்பட்ட நிலையில், WFAஅமைப்பின் மூலம் டாப் டாக்ஸ் கிளினிக்கில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

World For All Animal Care பதிவைப் பகிர்ந்துள்ளார் (@worldforallanimaladoptions)

தற்போது இந்த நாய் குணமடைந்து வரும் நிலையில் சிறுத்தையால் நாய்  தாக்கப்பட்ட  வீடியோவை அந்த அமைப்பினர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் சிறுத்தையால் தாக்கப்பட்ட பிறகும் தனது குட்டிகளை வெறுக்காமல் அவற்றிற்கு பாலூட்ட வந்த சக்தி தான் உண்மையான தாய் என அனைவரும் அந்த நாயை பாராட்டி வருகின்றனர். மேலும்  சக்தியின் குட்டிகளை அப்பகுதி  மக்கள் அன்போடு  பராமரித்து வருகிறார்கள்.