சென்னை சாலிகிராமத்தில், காந்தி நகரைச் சேர்ந்த சம்பத்(76) என்பவர் கடந்த 11ஆம் தேதி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டா அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இருசக்கர வாகனத்தை 16 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.