
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் குமாரசாமி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜ்(55) என்பவரின் மகளை, தங்கராஜ் என்பவருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜ் கடந்த 2014ம் ஆண்டு குமாரசாமியை கடப்பாரையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்ப்படுத்தினர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இதை விசாரித்த நீதிபதி சரவணன், நடராஜுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6000 ரூபாய் அபராதம் விதித்தார். அதன் பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.