உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அனிகா ரஸ்தோகி, என்னும் மாணவி பி ஏ எல் எல் பி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா கேடரின் 1998 பேட்ச் இந்திய காவல்துறை சர்வீஸ் அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார் . இந்நிலையில் அனிகா,  ராம் மனோகர் ரோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார்.

அப்போது கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் அனிகா விடுதியில் உள்ள அறையில் இறந்து கிடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி விரைந்து சென்று காவல்துறையினர் மயக்க நிலையில் இருந்த அனிகா வை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அதன் பின் மருத்துவமனையின் அறிக்கையில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அனிகா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

அதன் பின் காவல்துறையின் விசாரணையில் அறையின் கதவு உள்ளே பூட்டப்பட்டு இருந்ததாகவும், அவரது உடலில் உடைகள் அப்படியே இருந்ததாகவும், வேறு எதுவும் காயங்கள் இல்லை என்றும் கூறினார்கள். மேலும் விடுதி அறையில் மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.