
திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக தான் நீட் அப்படிங்கற உண்மையை… ரகசியத்தை ஒருத்தர் உளறினார்…. அவர் அதி புத்திசாலி… 20, 000 புத்தகம் படிச்சவரு. ஆனால் பாவம் ரெண்டே ரெண்டு திருக்குறள் தெரியாது. அவருக்கு பெயர் அண்ணாமலை. அவர் இப்ப செய்தியாளர் சந்திப்பில் உண்மையை உளறினார். நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை, நான் சொல்றேன்.
செய்தியாளர்களிடம் கேட்கிறார்கள்… என்ன தெரியுமா ? செய்தியாளரிடம் கேட்கும்போது சொல்கிறார்.. நீங்கள் டேட்டாவோட வரணும். இப்ப முட்டை மார்க் எடுத்தாலும் கூட டாக்டர் ஆகலான்னு ஒன்றிய அரசு ஒரு சட்டத்தை திருத்தி வெச்சிருக்கு. எது தகுதி தேர்வு பாருங்க ? நல்லா மார்க் எடுத்து…. 98 பிரசன்டேஜ் எடுத்தவனுக்கு இடம் கிடையாது. மார்க்கே எடுக்கல… நீ முட்டை மார்க் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்.. அது கூட பரவாயில்லை மைனஸ் மார்க் எடுத்தால் கூட நீ மருத்துவர் ஆகலாம் என ஒரு சட்ட திருத்தம்.
ஏம்பா இப்படி கொண்டு வந்தீங்கன்னு கேக்குறாங்க… அதுக்கு அந்த புத்திசாலி சொன்ன பதில்… இங்க இருக்கிற மாணவர்கள் எல்லாம் மருத்துவர்கள் மருத்துவர்கள் தான், உங்களுக்கு தெரியும். மருத்துவகல்வியில் பிஜி சீட்டு 1 லட்சத்து 80 ஆயிரம் சீட்டு இந்தியா முழுவதும் இருக்குன்னு சொன்னாரு. மொத்த சீட்டு 64,059 சீட்டு. இந்த 1 லட்சத்து 80 ஆயிரம் சீட்டும் காலியா இருக்குது, நிரப்பப்படாமல் இருக்கிறது. அதனால நாங்க வேற வழி இல்லாம மார்க் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி என்ன செஞ்சோம் ? நீங்க முட்டை மார்க் எடுத்தாலும் பரவாயில்லைன்னு ஒரு சட்டதிருத்தத்தை கொண்டு வந்தோம்ன்னு அண்ணாமலை சொன்னார் என தெரிவித்தார்.