
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ராஜபக்சே ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. இதனால் கேத்தபயே ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றம் மூலம் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் உள்ள 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் அனுர குமார திசநாயக்க முன்னிலை வகிக்கிறார்.
இதன் மூலம் இலங்கையின் அடுத்த அதிபராக அவர் பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது. இதுவரை எண்ண பட்டதில் 53.43 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திஷநாயக்க பெற்றுள்ளார். மேலும் தற்போது அதிபராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே 18. 99 சதவீத வாக்குகளும், சஜித் பிரேமதாசா 21.79 சதவீத வாக்குகளும் பயிற்சி பின்னடைவை சந்தித்துள்ளனர். பொதுவாக 50 சதவீத வாக்குகளை பெற்றாலே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு விடுவார். அந்த வகையில் 50 சதவீத வாக்குகளை அனுரகுமார திசாநாயக்க தாண்டியதால் இலங்கையின் அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.