துருக்கி நிலநடுக்கம் இத்துடன் முடியப்போவதில்லை என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் புரட்டி போட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்ததாக வேதனையான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இரண்டு கோடி மக்கள் வசிக்கும் துருக்கியின் மிகப்பெரிய நகரில் 2030 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மக்கள் தொகை அதிகரித்தால் வரும் நாட்களில் பூகம்பம் ஏற்படும் போது உயிரிழப்புகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்றும் தரமற்ற கட்டிடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினால் பேரழிவை தடுக்க முடியும் எனவும் நகர்ப்புற கட்டுமான வல்லுநர் அறிவுறுத்தியுள்ளார். துருக்கியின் முக்கிய நகரில் 5 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் எனவும் பலி எண்ணிக்கை பல ஆயிரம் தாண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.