கோயம்புத்தூரில் தற்போது பிரபல ரவுடியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர். அதாவது பிரபல ரவுடியான ஆல்வின் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. இவர் நேற்று நள்ளிரவு 2:30 மணி அளவில் கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்ற நிலையில் அவர் காவல்துறையினரை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதனால் தற்காப்புக்காக போலீசார் அவரை சுட்டனர். உதவி ‌ காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் துப்பாக்கி எடுத்து சுட்டதில் ஆல்வின் முட்டிகளில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சமீப காலமாக தமிழகத்தில் ரௌடிகள் மீது என்கவுண்டர் ஆக்சன் அதிரடியாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.