
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை, அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து இளைஞர்களுடன் சேர்ந்து அமைச்சர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். சமூகத்துக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவது அதிமுகவினரின் பண்பாகும். விளையாட்டு வீரர்களுக்கு எந்தவித சலுகைகளையும் திட்டங்களையும் திமுக அரசு வழங்கவில்லை.
இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் விளையாட்டு பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், இது போன்ற நிகழ்ச்சிகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், திமுகவும், பாஜகவும் ஒரு புரிதலுடன் செயல்படுவதால் மக்கள் பிரச்சினை பற்றி இரு கட்சிகளும் பேசுவதில்லை என்று விமர்சித்துள்ளார். சமூக வலைதளங்களில் திமுகவும் பாஜகவும் பரஸ்பரம் டிரெண்டிங் செய்வது தொடர்பான கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்துள்ளார். மீனவர்கள் கைதுக்கு கடிதம் எழுதுவதை தவிர மக்களின் நன்மைக்காக CM ஸ்டாலின் என்ன செய்தார் என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பு உள்ளார்.