கோவை அன்னபூர்ணா ஹோட்டல் குழுமத்தின் தலைவர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து எழுப்பிய கேள்வி, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சீனிவாசன் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டார். ஆனால், இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அன்னபூர்ணா குழுமம் புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இந்த விளம்பரத்தில் பன் மற்றும் கிரீம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. ஆனால், சில மணி நேரங்களில் இந்த விளம்பரத்தில் இருந்த ஹேஷ்டேக்குகள் நீக்கப்பட்டு, மாற்றப்பட்டன. அதோடு அந்த வீடியோவும்நீக்கப்பட்டது.

மேலும் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அன்னபூர்ணா பக்கத்தில் வெளியிடப்பட்ட கிரீம் பன் வீடியோ மற்றும் ஹேஷ்டேக்குகள் நீக்கப்பட்டுள்ளது.