உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone, iPad, Mac, Apple watch ஆகிய பொருள்களை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்களை வாங்குவது என்பது பலருடைய கனவாக உள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் சார்பாக இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு எனப்படும் CERT-In , apple பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ஆப்பிள் தயாரிப்புகளில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ரிமோட் அட்டாக் செய்பவர் இந்த பாதிப்புகளில் சிலவற்றை பயன்படுத்தி சிறப்புரிமை, முக்கியமான தகவல் வெளிப்படுதல், பாதுகாப்பு கட்டுப்பாடு பைபாஸ் மற்றும் ரிமோட் குறியீடு செயல்படுத்துதல் ஆகியவற்றை இலக்கு அமைப்பில் தூண்டலாம் என்று தெரிவித்துள்ளது. எனவே ஆப்பிள் பயனர்கள் செட்டிங்ஸ் சென்று software update செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.