
இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியது.இந்நிலையில்இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மே20) நிறைவு பெறுகிறது.
கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25% சீட் ஒதுக்கப்படும் (85,000-க்கும் அதிகமான இடங்கள்). எனவே, விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோர் TNSchools இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.