
மத்திய அரசு இன்னும் சில தினங்களில் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு பின் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 42% ஆகவும், பிட்மென்ட் காரணியையும் உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என்று சில செய்திகள் தெரிவிக்கிறது.
அவ்வாறு அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியும் உயரும். அதோடு பே மேட்ரிக்ஸ் அளவை பொறுத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வானது மாறுபடும். வருகிற மார்ச் 8ம் தேதிக்கு பின் அகவிலைப்படி மற்றும் பிட்மென்ட் காரணியை திருத்த அரசு திட்டமிட்டு உள்ளது.