
தற்போதுள்ள ஊழியர்களுக்கு இமாச்சலபிரதேசம் அரசு இரட்டை மகிழ்ச்சி செய்தியை வழங்கி இருக்கிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் 2.15 லட்சம் ஊழியர்களும், 1.90 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள். இமாச்சலபிரதேசம் அரசானது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 31% ஆக இருந்த அகவிலைப்படி இப்போது 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. 3% அகவிலைப்படி உயர்வு இமாச்சலப்பிரதேசம் அரசின் கருவூலத்தில் சுமார் 500 கோடி கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.