
தமிழகத்தின் புதிய வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு வெளியிட்டுள்ளார். இந்த வாக்காளர் பட்டியலில் 9.11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதாவது இடப்பெயர்வு, இறப்பு மற்றும் இரட்டை பதிவு போன்ற பல்வேறு காரணங்களுக்காக 9.11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 1,23,064 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 6 கோடியே 51 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதேப் போன்று துறைமுகம் தொகுதி 1,69,000 பேருடன் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக இருக்கிறது. மேலும் வாக்காளர் பட்டியலை elections.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.