சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வேங்கைவயல் விவாகரத்தில் சிபிசிஐடி அறிக்கை தந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு துணை இருக்கும் என்று நான் நம்புகிறேன். சிபிசிஐடி விசாரணையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

வேங்கை வயலில் போராட்டம் நடத்திய மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் அச்சுறுத்தி கைது செய்துள்ளனர். சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் பழையது தான் புதியது இல்லை. தமிழ்நாடு காவல்துறை மீதான நம்பிக்கை எங்களுக்கு இல்லை அதனால் தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிராக அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். பெரியாருக்கு எதிரான விமர்சனத்தை அம்பேத்கருக்கு எதிரான விமர்சனமாகவே விடுதலைச் சிறுத்தைகள் பார்க்கிறது என்று கண்டித்துள்ளார்.