
தர்பூசணி பழத்தில் ரசாயனங்கள் கலப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நல்ல தர்பூசணி பழத்திற்கும், ரசாயனம் கலந்த பழத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்த அவர் விளக்கினார். இது குறித்து அவர் கூறியதாவது, தர்ப்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் கூறவில்லை.
அந்த பழம் உடல் நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம். சென்னையில் ஊசி மூலமாக ரசாயனம் செலுத்தி செயற்கையாக நிறமூட்டப்படுவதாக எங்கும் கண்டறியப்படவில்லை. சென்னையில் ஒரு சில இடங்களில் கெட்டுப்போன பழங்கள் விற்கப்படுவது மட்டுமே ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லா இடங்களிலும் தர்பூசணிகளில் நிறமூட்டி பயன்படுத்துவதாக கருதுவது தவறு என்று தெரிவித்தார்.