உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஓராய் கோட்வாலி பகுதியில் அமன் ராயல் கார்டனில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திருமண விழா ஒன்று நடைபெற்றது. அதில் டெக்கரேஷன் பணியாளர்கள் நேரம் தாழ்த்தி வந்ததால் மணமகன் குடும்பத்தினருக்கும், டெக்ரேசன் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிறியதாக தொடங்கிய வாக்குவாதம் இறுதியில் அடிதடி சண்டையில் முடிந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் இரு குழுவினரும் தகாத வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் திட்டியதாகவும், முடிவில் வாக்குவாதம் அடிதடியில் முடிந்ததாகவும் கூறினர்.

மேலும் இந்த கலவரத்தில் மேசை தற்காலிகளை ஒருவருக்கொருவர் வீசி மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து டெக்கரேஷன் பணியாளர்களுடன் இணைந்த மற்றும் சில டெக்கரேஷன் பணியாளர்கள் பிரச்சனையை தடுக்காமல், மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த மோதலைத் தொடர்ந்து விருந்தினர்கள் பலர் நிகழ்ச்சியை விட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் முழுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.