
தென்காசி மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமான மது பாட்டில் விற்பனை, வெளிமாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா, போதை மாத்திரை, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த ஆண்டில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 1.1.24 முதல் 31.8.24 வரை சுமார் 3781 கிலோ புகையிலை பொருள்கள் பரிமுலை செய்யப்பட்டுள்ளது.
அதோடு ரூ.86,05,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 349 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறையாக 25,000 ரூபாய் அபராதமும், 15 நாட்களுக்கு கடை சீல் வைக்கப்படும்.
2-வது முறையாக தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம், ஒரு மாதம் கடை சீல் வைக்கப்படும். 3-வது முறையாக தவறு செய்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் மற்றும் 1 மாதங்களுக்கு கடை சீல் வைக்கப்படும். இவ்வாறு கடைகளில் சட்டத்துக்கு விரோதமான கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்கப்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 9487548177, 9411494115 மற்றும் 10581 என்ற ட்ரோல் ஃப்ரீ என் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.