சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. அதனை நிறுவேற்ற நிறைய பணம் தேவைப்படுகிறது. ஒரே நேரத்தில் பணத்தை யாராலும் செலுத்த முடியாது. அதற்காக வீட்டு கடன் வாங்க வேண்டியதாக இருக்கிறது. அந்த தொகையை மாதாந்திர EMI மூலம் செலுத்த வேண்டும். ஒருவர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து 20 ஆண்டுகளுக்கு 45 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார் என்றார்,

அதற்கு அவர் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். அந்த வட்டியின் விகிதம் CIBIL மதிப்பெண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

CIBIL மதிப்பெண் 800க்கு மேல் இருந்தால் 9.15 % வட்டி

CIBIL மதிப்பெண் 700 முதல் 799 வரை இருந்தால் 9.25 % வட்டி

CIBIL மதிப்பெண் 700 முதல் 749 வரை இருந்தால் 9.35 % வட்டி

CIBIL மதிப்பெண்  650 முதல் 699 வரை இருந்தால் 9.45 % வட்டி கடனை பெறலாம்.

SBI-யில் வீட்டு கடனுக்கு செய்லாக்க கட்டணமாக 0.35 முதல் 0.50 % செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஜிஎஸ்டியும் பொருந்தும்.