சீமானைத் தொடர்ந்து விஜய்யை வம்புக்கு இழுத்து இருக்கிறார் வீரலட்சுமி. பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது. இது குறித்து விஜய்யை ஒன் டூ ஒன் பேச சொல்லுங்க, அவரால் முடியாது. ஏனென்றால் பக்கத்தில் இருப்பவர்கள் பேப்பர் எடுத்து கையில் கொடுத்தால்தான் அவரால் பேச முடியும். அப்படிப்பட்ட அரசியல் தலைவர் தமிழ்நாடு மக்களுக்கு தேவை இல்லை என்று அவர் ஆவேசம் அடைந்தார்.

மேலும் நீங்க எதுக்கு அரசியலுக்கு வருகிறீர்கள். சினிமா துறையில் உங்கள் துறை சார்ந்த பெண்கள் பாலியல் தொந்தரவால் பலர் பாதிப்படைகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு குடுங்க. இந்த மண்ணுடைய அரசியலை பார்ப்பதற்கு எங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அரசியல் அறிவு நிறைய இருக்கிறது. நாங்கள் இருக்கும் போது நீங்கள் எதுக்கு வர வேண்டும். அப்போ தமிழ்நாட்டு இளைஞர்களை கேனை என்று நினைக்கிறீர்களா? இன்று தெரிவித்தார்.