
உத்தரப்பிரதேச மாநிலம் நிதின் நகரில், குப்பை கொட்டியதை மையமாகக் கொண்டு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அனில் மஹோர் என்பவர் உயிரிழந்தார். நரேந்திர யாதவ் தனது வீட்டின் அருகே குப்பைகளை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அனில் ஒரு கம்பால் நரேந்திரனை தாக்கியதாக அருகில் இருந்தவர்கள் கூறினர். பின்னர், நரேந்திரனின் சகோதரர் யோகேந்திர யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அனிலை கடுமையாக தாக்கினர். இது தொடர்பான சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
#WATCH | #Gwalior: Man Dies 4 Hours After Brutal Physical Fight With Neighbour Over Garbage Disposal#MadhyaPradesh #MPNews pic.twitter.com/Sc2wjl3bQl
— Free Press Madhya Pradesh (@FreePressMP) April 26, 2025
அச்சம்பவத்திற்குப் பிறகு அனிலுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. பல மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்ற பின்னர், மாவட்ட மருத்துவமனையில் அனில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அனிலின் குடும்பத்தினர், யாதவ் குடும்பத்தினர் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
ததிபூர் போலீசார் சம்பவ இடத்தில் வழக்குப் பதிவு செய்து, மரணத்திற்கான காரணம் உறுதி செய்ய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். போலீசார் தெரிவித்ததாவது, விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறினர்.