
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக ராணுவ விமானமும், ஹெலிகாப்டரும் தாழ்வாக பறந்து வருகிறது. நேற்று முன்தினம் இரண்டு முறை பழனி பேருந்து நிலையம் மற்றும் நகர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வானில் வட்டமடித்தபடி சென்றது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்று ராணுவ ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்து பறந்து சென்றதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் ராணுவ விமான பயிற்சி பள்ளியிலிருந்து ஹெலிகாப்டர்கள் வந்து செல்கிறது. எனவே இது குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என தெரிவித்தனர்.