
தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதால் வாரிசு அரசியல் நடப்பதாக எதிர்கட்சிகள் குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல் பதவி வழங்கப்பட்டது குறித்து விமர்சித்துள்ளார். இதுகுறித்து நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, சுப்ரீம் கோர்ட் பல்வேறு நிபந்தனைகள் வழங்கி செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழக்கியுள்ள நிலையில் அவர் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ள நிலையில் தற்போது அமைச்சராக இருப்பவர் அதனை மீறும் பட்சத்தில் செந்தில் பாலாஜி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகம் தான். அதன் பிறகு பல நாட்களாக ஊடகங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல் பதவி வழங்கப்படும் என்று செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அவர் துணை முதல்வராக பொறுப்பேற்றவுடன் இனி தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும். திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு துணை முதல்வர் பதவியில் வழங்கப்படவில்லை. மேலும் வாரிசு அரசியலுக்கு வருகிற தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றார்.