பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உயர்ந்த முருகர் சிலை அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினார். அதோடு அதை ஒட்டி உள்ள பட்டா இல்லாத இடங்களில் உள ஆக்கிரமிப்புகள் குறித்தும் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழ் கடவுள் முருகன் கோவில் அதிக அளவு கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாகவும் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 60 முதல் 70 வயது உள்ளவர்களுக்கு அரசு கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்து கொடுத்துள்ளோம். அதேபோன்று பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை மருதமலை கோவிலில் கட்டப்பட  உள்ளது. சமீப காலமாக முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து  அந்த கோவிலில் மிகவும் உயரமான அதாவது 160 அடி உயரமுள்ள முருகன் சிலை அமைக்க உள்ளதாவும், ஆசியாவிலே இது தான் உயரமானது என்றும் கூறினார். தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவில் ஏழாவது வீடாக உள்ளதால், இங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.