இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். தி.மு.க ஆட்சி மூத்த தலைவர் கருணாநிதி பேனா சிலையை உடைப்போம் என நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளர் சீமான் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சேகர்பாபு, கலைஞரின் உடன்பிறப்பு என்ற சொல்லுக்கு ஒரு கோடிக்கும் மேல் தொண்டர்கள் உள்ளனர். வெறும் லட்சங்களில் தொண்டர் உள்ள அவர் உடைத்தால் கோடிக்கணக்கான தொண்டர்கள் பதம் பார்த்து பற்றி உங்களுக்கே தெரியும் நான் கூற வேண்டியது இல்லை என கூறினார்.

சீமான் வெறும் வாய்ச்சொல் வீரர், வெறும் சொல்லில் மட்டும் இல்லாமல், களத்திலும் அதனை காட்ட வேண்டும். எந்தப் படையையும் தி.மு.க எதிர்கொள்ளும் எனக் கூறினார். திருச்செந்தூர் யானை பாகன் உட்பட இருவரை கொன்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சேகர்பாபு, யானை மிதித்து உயிரிழந்த பாகன் மற்றும் அவரது உறவினர் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்படும். மேலும் சிசுபாலனின் மனைவி தகுதி உடையவராக இருந்தால் அறநிலைத்துறையில் வேலை வாய்ப்பு வழங்க பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.