அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன். இவர் மீது வருமானவரித்துறையினர் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதாவது பத்திர கவுண்டன் பாளையத்தை சேர்ந்த இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது 41 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி, 70 கோடி ரூபாய் முதலீடு ஆவணங்கள் மற்றும் 35 லட்சம் ரொக்கம் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விரைவில் இளங்கோவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.