
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், ஊழல் வழக்கிலே கைது செய்யப்பட்டு இலாக இல்லாத அமைச்சராக இன்றைக்கு சிறையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. அவர் பெயில் போடுறாரு என்னை பெயில்ல விடுங்கன்னு.. அந்த பெயில் டிஸ்மிஸ் ஆகுது. பெயில் கிடையாது. நீ அமைச்சராக இருக்கிறாய். ஜெயிலில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்க..
உனக்கு அதிகாரம் பலமா இருக்கு ? சோதனை செய்ய வந்த வருமானத்துறை அதிகாரிகளை அடித்த… உதைத்த…. இன்னும் உன் தம்பி கிடைக்கல… தலைமுறைவாக இருக்கிறான்… உன்னை வெளியே விட முடியாது என்று தள்ளுபடி செய்கிறார்கள். 11 மணிக்கு தீர்ப்பு வருகிறது. 2 மணிக்கெல்லாம் உச்சநீதிமன்றத்தில் பெயில் பெட்டிஷன் போடுற.
ஊழல் வழக்கிலே கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பெயில் இல்லை என்று 10.30 மணிக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. உடனடியாக இந்த முதலமைச்சர் தலைமையேற்று இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம், உச்சநீதிமன்றத்திலே 2:00 மணிக்கு எல்லாம் பெயில் போடுது. இந்த வேகமும் காவிரி விஷயத்துல பண்ணிக்கலாமாம்… உன்னுடைய கட்சி வேணாம்னு சொல்லல…. ஆனால் இதே வேகமும், துடிப்பும் இந்த விவசாயிகளுக்கு….
டெல்டாவில் இருக்கின்ற விவசாயிகளுக்கு… தண்ணீரை தர மாட்டேன் என்று சொன்ன… உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டேன் என்று சொன்ன பிறகு ஏன் உச்சநீதிமன்றத்திலே கர்நாடக முதலமைச்சர் மீது அவமதிப்பு வழக்கை தொடர்வதற்கு முதலமைச்சர் ஏன் நடுங்குகிறார் ? முதுகெலும்பில்லாத ஒரு முதலமைச்சர். இதே எங்களுடைய ஆட்சி காலத்திலேயே….
இதே அவமதிப்பு வழக்கு கர்நாடக முதலமைச்சர் மீது போடப்பட்டது. எஸ்.எம் கிருஷ்ணன் என்று நினைக்கிறேன்… டெல்லி உச்சநீதிமன்றம் நேரடியாக வரவேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டது. அன்றைக்கு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும். அதை தவிர்ப்பதற்காக உடனே தண்ணீரை திறந்து விட வைத்தத அரசு அம்மாவின் உடைய அரசு தெரிவித்தார்.