நாட்டில் கடந்த வருடம் ரிசர்வ் வங்கியால்  புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வைத்திருந்தால் உடனடியாக வங்கியில் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் தாங்கள் வைத்திருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப ஒப்படைத்தனர். ஆனால் பலர் 2000 ரூபாய் நோட்டுக்களை ஒப்படைக்காமல் கையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ரூபாய் 3 லட்சத்தி 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 30ஆம் தேதி நிலவரப்படி, 97.96% நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வந்துள்ளன. இன்னும் ரூபாய் 7 ஆயிரத்து 261 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்களிடத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நோட்டுக்களை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களில் பொதுமக்கள் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.