
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் ஒரு வீட்டின் பின்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ராட்சத பல்லி ஒன்று உள்ளே விழுந்து கிடந்தது. இதனைப் பார்த்த அந்த வீட்டின் குடும்பத்தினர் பதறி அடித்து விலங்கு நல ஆர்வலர் அஜித்தா பாண்டேவுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்படி விரைந்து வந்த அஜித்தா தண்ணீர் தொட்டியில் கிடந்த ஆப்பிரிக்க, ஆசிய வகையை சேர்ந்த மிகப்பெரிய ராட்சத பல்லியை குச்சியை வைத்து தண்ணீர் தொட்டில் ஓரத்திற்கு தள்ளி தனது கைகளால் பிடித்து இழுத்தார்.
உடனே அந்தப் பல்லி அஜித்தாவை இரண்டு முறை கடிக்கும் முயன்றது. இருந்தும் லாவகமாக அந்தப் பல்லியின் வாலை பிடித்து இழுத்து வெளியே எடுத்துச் சென்றார். இதனை வீடியோவாக எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோவிற்கு பலரும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து முறையாக விலங்குகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தினர்.மேலும் அவரது துணிச்சலை பாராட்டினர்.