
அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் செயற்கையாக பங்கு விலையை உயர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு நிபுணர்கள் குழு அமைத்த உச்சநீதிமன்றம், 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து செபி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. முதலீட்டாளர்களின் பங்களிப்பை உறுதிசெய்யும் அடிப்படையில் நெறிமுறை குழு தேவை என்பதை உணர்கிறோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.