
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தற்போது இவர் இந்திய அளவில் ஃபேமஸான இயக்குனராக வளம் வருகின்றார். கடைசியாக அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. படம் அதிக விமர்சனத்தை பெற்றாலும் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து கெத்து காண்பித்தது. இந்நிலையில் இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர் ஹிந்தியில் பேபி ஜான் என்னும் படத்தை தயாரித்து இருக்கின்றார்.
இது தெறி பணத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தெறி படமும் வழக்கம் போல் மெகா ஹிட் அடித்தது. இப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜயை வைத்து மெர்சல், பிகில் ஆகிய படங்களை அட்லீ இயக்கினார். 2 படங்களில் மெர்சல் மெகா ஹிட் அடித்தது. குறிப்பாக விஜய்க்கு முதன்முறையாக 100 கோடி வசூல் செய்து கொடுத்த படம் என்ற பெயரையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிகில் படம் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஹிந்தியில் படம் இயக்க சென்றார் அட்லீ.
முதல் ஹிந்தி படத்திலேயே ஷாருக்கான் ஹீரோவாக வைத்து படம் செய்தார். அவருடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் என தென்னகத்துகாரர்களை ஒட்டுமொத்தமாக இறக்கினார். அந்தப் படம் மெகா ஹிட் ஆனது. இப்படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து அவர் முழுக்க ஹிந்தியில் கவனம் செலுத்துகிறார். மேலும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் காண பேபி ஜான் படத்தை இவர் தயாரித்து இருக்கின்றார். இதில் வரும் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்போடு சமீபத்தில் வெளியான இந்த படத்துக்கு போதுமான வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேபி ஜான் படம் உருவானதாகவும், தற்போது 50 கோடி ரூபாயை கூட வசூலிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதனால் அட்லி மிகப்பெரிய அப்சட்டில் இருப்பதாகவும் இந்த நஷ்டத்தை எதைக்கொண்டு ஈடு செய்வது என்று தனது மனைவி பிரியா மற்றும் நெருங்கிய வட்டாரத்திடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.