
நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார்கள். ஏனெனில் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முதலீடு செய்வதற்கும் வங்கி பாதுகாப்பானது. அதோடு வங்கிகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் இருக்கிறது. அதன்பிறகு வங்கிகளில் பணம் எடுக்க மற்றும் போடுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் பெரும்பாலானோர் ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் தற்போது ஏடிஎம் கார்டில் இருக்கும் எண்களுக்கான அர்த்தங்கள் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம். அதாவது ஏடிஎம் கார்டின் முன்பக்கத்தில் 16 இலக்க எண்கள் இருக்கும். இதில் முதல் 6 எண்கள், அதை அளிக்கும் (விசா, மாஸ்டர் ETC) நிறுவன அடையாள எண்களாகும். அதன் பிறகு 7 முதல் 15 வரையிலான எண்கள் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குடன் தொடர்புடைய எண்களாகும். இதில் உள்ள 16வது எண் டிஜிட்டல் Check எண்ஆகும். மேலும் அதாவது அந்த அட்டை செல்லுமா? அல்லது காலாவதியாகிவிட்டதா என்பதை உணர்த்தும் நம்பர் ஆகும்.