மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில்  நரேந்திரர்  என்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணமும், ஏடிஎம் கார்டையும் பறித்து சென்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி குற்றவாளிகள் அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மேலும் இருபதாயிரம் ரூபாய் எடுத்துள்ளார்கள்.  இதனையடுத்து போலீஸ் கான்ஸடபிள் ஒருவர் அவர்களை துரத்திக்கொண்டு ஓடியுள்ளார். அவர்கள் காரில் தப்பிக்க முயன்றுள்ளார்கள்.

இதனால் நரேந்திரர் அந்த காரின் முன்பக்க கதவை பிடித்துக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தொங்கிக்கொண்டே சென்றுள்ளார். பின்பு காரின் வேகத்தை குறைத்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் உதவியோடு துரத்தி உள்ளார்கள். இதனையடுத்து மாநிலம் முழுவதும்  சோதனை சாவடிகளில் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு மூன்று பேரை பிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது