
சிதம்பரம் மின் நகரில் முஹம்மது மன்சூர் அவரது மனைவி சமீரா பேகம் வசித்து வருகின்றனர். சமீரா பேகம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு அந்த இயந்திரத்தில் எப்படி பணம் எடுப்பது என்று தெரியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு வந்த 35வயது உள்ள அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சமீரா பேகத்திடம் உதவி செய்வதாக கூறி பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.
பின்பு அவருடைய ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு சமீரா பேகத்தின் கார்டை மாற்றிக் கொண்டு சென்றுள்ளார். இதனை அறியாமல் சமீரா பேகம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென்று 8ம் தேதி சமீரா பேகத்திற்கு அக்கவுண்டில் இருந்து ரூபாய் 90,000 எடுத்ததாக தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் அந்த மர்ம நபர் யார் என்பதை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.