
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் பூங்குளம் ரங்கன் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போன் மூலம் 9ஆம் வகுப்பு மாணவியுடன் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் ஆபாசமான வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்புமாறு தொந்தரவு செய்துள்ளார்.
மறுத்தால் வீடு புகுந்து வெட்டி விடுவதாகவும் மாணவியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்த மாணவி தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த இளைஞருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த இளைஞர் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவி தனது தாயாரிடம் தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
அதன் பின் மாணவியின் தாயார் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரி பேரில் வழக்குப்பதிவு செய்து ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் ஜெய கீர்த்தி விசாரணை நடத்தியத்தில், அந்த 18 வயது இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் ரஞ்சித், சந்தோஷ் மற்றும் 17 வயது 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.